புதிய திருப்பம்… பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணி?… சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்று தமிழக வெற்றிக்கலகம் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டம் திட்டமிட்டபடி கண்டிப்பாக நடைபெறும்.

அதிமுகவில் இருந்து வேறு தலைவர்கள் யாரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அரசியல் கட்சிகளை சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது. தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் யார் எப்போது கூட்டணிக்கு வரவேண்டுமோ அப்போது வருவார்கள். கொள்கை எதிரியான பாஜகவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த உறவும் இருக்காது என்று அதிகாரப்பூர்வமாக அருண்ராஜ் அறிவித்துள்ளார்.