BREAKING: சற்றுமுன் விஜய் கட்சியின் முதல் வேட்பாளர் அறிவிப்பு… முக்கிய தொகுதியில் போட்டி…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகின்றது. குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனின் வருகைக்குப் பிறகு கட்சியில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில் 70 சதவீதம் பட்டியலை அவர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

2026 சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக்கழகம் இன்று அறிமுகம் செய்கிறது. இதில் முதல் வேட்பாளராக தமிழக வெற்றிக்கழகம் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் அறிவிக்கப்பட இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 20 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்