வெண்டைக்காய் ஊறிய தண்ணீர்… ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறதா? – உண்மை என்ன…?

By Elango on மார்கழி 14, 2025

Spread the love

வெண்டைக்காயை இரவு முழுவதும் கண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் நார்ச்சத்து வைட்டமின்கள் மக்னீசியம் ஃபோலேட் ஆன்டிஆக்சிடென்ட் போன்ற சத்துக்கள் கிடைக்கலாம். சில ஆய்வுகளில் இது ரத்தத்தில் சர்க்கரையையும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு உறுதியான ஆதாரங்கள் இன்னும் இல்லை.

வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் கிட்னி கல் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு செரிமான தொந்தரவுகளும் ஏற்படலாம். எனவே வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சமைத்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.