இதெல்லாம் ரொம்ப ஓவர்… சபரிமலையில் தவெக ரசிகர் செய்த செயல்… வீடியோவை பார்த்து செம கடுப்பான நெட்டிசன்கள்…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

சமீப காலமாகவே விஜயையும் அவரை சார்ந்த ரசிகர்களையும் தொண்டர்களையும் தற்குறி என்ற வார்த்தையை பயன்படுத்தி பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதற்கேற்றது போல ஒரு சிலருடைய செயல்கள் இருப்பதாக தொடர் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தமிழக தேர்தலில் புதிய மாற்றத்தை செயல்படுத்த விஜய் முயன்று வருகின்றார். பல வருடங்களாகவே திமுக மற்றும் அதிமுக என்ற இரு பெரும் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை அமைத்து வருகின்றன. இந்த தேர்தலில் எப்படியாவது அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று விஜய் பல வியூகங்களை வகுத்து வருகின்றார்.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் நடத்தாமல் இருந்த விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி முடித்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் தற்போது இணையத்தில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு உகந்த மாதம்.

   

இந்த மாதத்தில் பல பேர் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி வழிபாட்டை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் ரசிகர் ஒருவர் சபரிமலையில் தமிழக வெற்றிக்கழகம் கொடியை தாங்கியவாறு வழிபாடு செய்ய செல்கின்றார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் அந்த ரசிகரின் செயலை கலாய்த்து வருகிறார்கள்.