தினமும் ரூ.222 செலுத்தினால் போதும்…! ரூ.11 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும்… அதிக லாபம் தரும் போலீஸ் ஆபிஸின் சூப்பர் திட்டம்…!!

By Devi Ramu on மார்கழி 13, 2025

Spread the love

தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit – RD) என்பது பாதுகாப்பானதும், அரசின் உத்தரவாதம் பெற்றதுமான ஒரு பிரபலமான சிறுசேமிப்புத் திட்டமாகும். இந்தக் கணக்கைத் தொடங்க வெறும் ₹100 இருந்தாலே போதும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைச் சேமிப்பதன் மூலம், முதிர்வின்போது கணிசமான வட்டியுடன் கூடிய பெரிய தொகையைப் பெறலாம்.

தற்போது, அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு 6.70% வட்டி விகிதம் வழங்குகிறது. உதாரணமாக, ஒருவர் தினமும் ₹333 சேமிக்க ஆரம்பித்தால் (மாதம் ₹10,000), 10 வருடங்கள் முடிவில், மொத்தச் சேமிப்பான ₹12 லட்சத்துடன், வட்டியாகச் சுமார் ₹5,08,546 சேர்ந்து, மொத்தமாக ₹17,08,546 வரை கிடைக்கும்.

   

இதேபோல், தினமும் ₹222 சேமித்தால் (மாதம் ₹6,660), 10 வருடங்களின் முடிவில் சுமார் ₹11,37,891 வரை பெற முடியும். இந்த RD திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, கணக்கைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குக் கொண்டு சென்றால், டெபாசிட் செய்த தொகையில் 50% வரை கடனாகப் பெறலாம். இந்தக் கடனுக்குக் கூடுதலாக 2% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

   

இந்த RD திட்டத்தை ஒரு நபர் தன் பெயரிலோ, குழந்தைகளுக்கோ, மூத்த குடிமக்களுக்கோ அல்லது பெற்றோர், குழந்தைகள் சேர்ந்தும் கூட்டுக் கணக்காகவும் (Joint Account) தொடங்கலாம். இந்தச் சேமிப்புக் காலம் பொதுவாக 5 வருடங்கள் என்றாலும், மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கும் வசதியும் இதில் உள்ளது. ஆனால், மாதாந்திரத் தவணையைச் செலுத்தத் தவறினால், மாதத்திற்கு 1% அபராதம் விதிக்கப்படும்; தொடர்ந்து 4 தவணைகள் தவறினால் கணக்கு மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.