“வரவில்லை என்றால் உயிரோடு இருக்க மாட்டாய்” பேராசிரியரின் லீலை…! கொந்தளித்த மாணவர்கள்…!! பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 13, 2025

Spread the love

கரூர் அரசு கலைக் கல்லூரி ஒன்றில், ஒரு மாணவி அங்கிருந்த பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் திட்டியதாகக் கூறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “இப்போது வரவில்லை என்றால் உயிரோடு இருக்க மாட்டாய்” என்று அந்தப் பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சக மாணவ மாணவிகள் ஒன்று திரண்டு கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் மீது மாணவி புகார் அளித்திருப்பதும், உடனடியாக நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளதும் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.