பட்டாவில் வருகிறது புதிய மாற்றம்… இனி இதுதான் ரூல்ஸ்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் பட்டாவில் தாலுக்கா, கிராமம், உரிமையாளரின் பெயர் மற்றும் சர்வே எண் உள்ளிட்ட பிரிட்டிஷ் கால விவரங்கள் மட்டுமே இடம்பெற்று வருகிறது. தற்போதைய நடைமுறைகள் இல்லாததால் குழப்பங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இதனை தீர்க்கும் வகையில் விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பட்டாவில் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.