ரகசியமாக வீட்டில் வளர்த்த 10 அடி உயர கஞ்சா செடி… மூட்டை மூட்டையாக மிட்டாய்… வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்…!!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

திருச்செங்கோடு, தொண்டிக்கரடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை திருச்செங்கோடு டவுன் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல் ஆய்வாளர் வளர்மதி தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 10 அடி உயரத்திற்கு வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடியும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவும், 80 போதை மிட்டாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

   
கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் மற்றும் திலீப் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.