FLASH NEWS: 2026 தேர்தல்…. தவெக கூட்டணி அமைக்கும் கட்சி… சற்றுமுன் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியின் பலம் மேலும் கூடியுள்ளது.

இதனால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியை இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பிரச்சார கூட்டத்தை நடத்தி முடித்தார். இதனை தொடர்ந்து ஈரோடு சத்தியமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

   

இந்நிலையில் விஜய் ஈரோட்டில் நடத்த உள்ள கூட்டத்தில் மாற்று கட்சியினர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் கூறுகையில், விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக இயக்கும் கட்சிகளுடன் தான் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்கும். ஈரோடு கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் யாரெல்லாம் இணைய உள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் அடுத்தடுத்து பலரும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.