டீச்சர் நான் விஷம் குடிச்சுட்டேன்… வகுப்பறையில் பள்ளி மாணவி சொன்ன விஷயம்… அடுத்த நொடியே நடந்த பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இதனிடையே நேற்று காலை 9 மணிக்கு அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது மாணவி மிகவும் சோர்வாக இருந்ததால் சக தோழிகள் அவரிடம் உடல்நிலை ஏதாவது சரியில்லையா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவி தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதை தொடர்பாக ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

இதனால் பதறிப்போன பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தற்போது மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக அந்த மாணவி மனம் உடைந்து விஷம் குடித்து விட்டு பள்ளிக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.