4 மனைவிகள், 6 பிள்ளைகள்… கள்ளக்காதலியை இரவோடு இரவாக தீ வைத்து எரித்த போலீஸ்காரர்… தமிழகத்தையே அதிரவைக்கும் சம்பவம்…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

பெண்ணை கல்லால் அடித்து தீ வைத்து எரித்து கொலை செய்த முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் உத்தமபாளையம் வட்டம் மலை அணை பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இதனை கால்நடை மேய்க்க சென்ற நபர் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் நெய்க்காரப்பட்டி சேர்ந்த வடிவுக்கரசி என்பது தெரிய வந்தது.

அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சந்தேகத்திற்கு இடமாக கலையம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சங்கர் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் காவலராக கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். அவருக்கு நான்கு மனைவிகள், மூன்று மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் திருமணத்தை மீறிய உறவில் பெண் தோழிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் சடலமாக கிடந்த வடிவுக்கரசியும் ஒருவர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சங்கர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

   

இதில் தனது உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி சங்கரிடம் வடிவுக்கரசி கொடுத்துள்ளார். நாளடைவில் அரசு வேலை வாங்கி கொடு இல்லை என்றால் உறவினர்களுக்கு பணத்தை திருப்பி கொடு என வடிவுக்கரசி வற்புறுத்தி வாக்குவாதம் செய்து உள்ளார். இதனால் ஷங்கர் வடிவுக்கரசியை பணம் தருவதாக அழைத்து வட்டமலை கரை அணை ஓடையின் மேல் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

   

மதியமாக இருவரும் மது அருந்திய நிலையில் பிறகு அருகே கிடந்த கல்லால் வடிவுக்கரசியின் தலை, கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். மேலும் 6 பவுன் தங்க நகைகளை பறித்துவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பலபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.