உச்சகட்ட கொடூரம்… மனைவியை துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த கணவன்… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் நடந்துள்ள ஒரு பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் மிஸ் ஸ்விசர்லாந்து அழகி போட்டியின் இறுதிச்சுற்று போட்டியாளரான கிரிஸ்தினா ஜோக்ஸி மோவிக் என்பவரை அவருடைய கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலையை அவர் அரங்கேற்றிய விதம் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைக்கிறது. அதாவது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற பிறகு அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை கூழாக்கிய உடற்பாகங்களை மிக்ஸி மூலம் மேலும் மறைத்து பிறகு ரசாயன கரைப்பானில் போட்டு அழித்துவிட முயன்றதாக கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

38 வயதான அந்தப் பெண் ஒரு காலத்தில் மிஸ் ஸ்விட்சர்லாந்து பட்டத்தை வெல்ல போட்டியிட்டவர். அவர் பின்னாளில் இளம் அழகிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியை தொழிலை செய்து வந்துள்ளார். அவருடைய 43 வயதான சுவிஸ் நாட்டு கணவர்தான் இந்த கொலையை செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஸ்விட்சர்லாந்தில் அவர்களது வீட்டில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் தன்னுடைய மனைவி திடீரென இறந்து கிடந்ததாகவும் பயத்தில் உடலை துண்டுகளாக வெட்டி மறைத்ததாகவும் கணவர் நாடகமாடியுள்ளார்.

   

இருந்தாலும் ஒரு மாதம் கழித்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்காப்பிற்காகவே மனைவியைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். அதாவது மனைவி கத்தியால் தம்மை தாக்கியதால்தான் கொன்றதாக அவர் கூறியிருந்தார். ஆனால் நீதித்துறை ஆய்வில் கிடைத்த உடற்கூறாய்வு அறிக்கை அவருடைய இந்த கூற்றை முழுமையாக மறுத்தது. அந்தப் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

   

மனைவியின் உடலை அவர் ஒரு மர அறுவை இயந்திரம், ஒரு கத்தி மற்றும் தோட்ட கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மேலும் அவர் உடல் பாகங்களில் சிலவற்றை மிக்ஸியை பயன்படுத்தி மிக நுண்ணிய கூலாக அரைத்துள்ளார். பிறகு அந்த கூழாக்கப்பட்ட பாகங்களை ஒரு வேதியல் கரைப்பாணீர் போட்டு அழித்துவிட முயற்சி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு மனித உயிர் மீது சிறிதும் இரக்கம் இல்லாத உச்சபட்ச குற்ற மனப்பான்மையுடன் அவர் இந்த கொலையை செய்து தடயங்களை மறைக்க முயன்றது தெளிவாக தெரிய வந்துள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.