இனி ஆதாரில் பெயர் மாற்றுவது ரொம்ப கஷ்டம்… வந்தாச்சு புதிய ரூல்ஸ்… வெளியான திடீர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது அனைத்து சேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ஆதாரில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கும். இதில் ஏதாவது தவறுகள் இருந்தால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக பெயரில் தவறு இருந்தால் ஆவணமாக பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. பெயர் மாற்றத்திற்காக பல்வேறு ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

அதில் குறிப்பாக யுதய் அனுமதித்த ஆவண பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது. அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டது. பான் கார்டில் பெயர் மற்றும் தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால் அது ஒரு அடிப்படை ஆவணமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆவண பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.