தமிழகத்தில் சுமார் 10 வருடங்கள் எதிர்க்கட்சியாக மட்டுமே இருந்து 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தாங்கள்தான் வெற்றி பெற வேண்டும் என திமுக நினைக்கிறது. மறுபக்கம் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து காய் நகர்த்தி வருகின்றது. திமுக வழக்கம் போல இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இவர்களுக்கு நடுவே பிரபல நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் திமுக தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் இருப்பதாகவும் இதனை கேட்டு ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் போன்ற எல்லா கட்சிகளில் இருந்தும் கணிசமான வாக்குகள் விஜய்க்கு போகும் என்று தெரியவந்துள்ளது. எனவே 2026 தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்ற தீவிர ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டு வருகிறாராம். அனேகமாக வருகின்ற பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் மூவாயிரம் ரூபாய் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. ஒரு பக்கம் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மீண்டும் விண்ணப்பித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளை முதல் வழங்கப்படுகிறது. இதுபோக மேலும் பல தேர்தல் வியூகத் திட்டங்களையும் திமுக வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
