சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்து அதிபர் டிரம்ப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினை கூட கூட்டிட்டு வந்தோம். அவள் அந்த அழகான முகத்துடனும் ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியை போல நிற்காத உதடுகளுடனும் இருக்கிறார் என்று வர்ணித்து பேசியிருக்கிறார். இப்படி தனது வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து அதிபர் டிரம்ப் பேசியது கடும் சர்ச்சையை இணையத்தில் கிளப்பியுள்ளது.
