தமிழகத்தில் அரசு ஊழியர்கள் டிசம்பர் 11 இன்று விடுமுறை எடுத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (டிட்டோஜாக் அமைப்பு) இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பை தவிர வேறு எந்தவித விடுப்பும் எடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
