தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டியின் நிலவுகின்றது. குறிப்பாக விஜய் 2026 தேர்தலை முதல் முறையாக எதிர்கொள்ள இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே அனைத்து கட்சியினரும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நெல்லை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் 50க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ள நிலையில் இந்த இணைப்பு விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
