அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததன் காரணமாகத் தமிழ்நாடு முதலமைச்சரால் அதை “தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று விமர்சித்துள்ளார். சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 10) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
திமுக ஒரு ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அல்ல என்றும், அது ஒரு குடும்பம் நடத்தும் “கார்ப்பரேட் கம்பெனி” என்றும் பழனிசாமி சாடினார். திமுகவில் மூத்த தலைவரான துரைமுருகனுக்கு ஏன் இன்னும் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உழைப்பால் உயர்ந்து முதலமைச்சர் பதவியை அடைய முடியும் என்ற கட்சியின் அடிப்படை ஜனநாயகத் தன்மையை அவர் வலியுறுத்தினார்.
