விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதுச்சேரியின் நடிகர் விஜய் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பொன்முடி கூறியதாவது, தவெக தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இப்போதுதான் அவர் வந்து இருக்கிறார். ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கரூர் மக்கள் அளித்த பாடத்தில் கற்றுக்கொண்டு இப்போது அவர் டயத்துக்கு வந்து டயத்துக்கு சரியாகப் போகிறார் என்றால், இப்போதுதான் கொஞ்சம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். விஜய் இப்போது எல்கேஜி தான் படிச்சிட்டு இருக்கிறார். வரட்டும் அவர் வரும்போது பார்க்கலாம் என்று திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கிண்டலாக பேசியிருக்கிறார்.
