விஜய்யின் தவெகவுடன் கூட்டணி?… 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி… சற்றுமுன் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார் என்பதற்காக நாங்களும் சேருவோம் என்பதே தவறு. அமமுக தவிர்த்து விட்டு யாரும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார் என்பதற்காக நாங்களும் அதில் இணைவோமா என்ற கேள்வியே தவறானது. நாங்கள் எதற்கு இணைய வேண்டும்? அண்ணாமலையை சந்தித்தது நட்பு ரீதியிலானது. இதில் அரசியல் எதுவும் கிடையாது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு சிலருடைய சுயநலம் தான் காரணம்.

தனக்கு கட்சி பதவி மட்டும் போதும். திமுகவை ஆண்டு விட்டு போகட்டும் என்றும் தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை, தனது எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என யார் இருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும். கட்சியில் சேர அமமுக நிபந்தனை விதிக்காது. மரியாதை கொடுக்கும் இடத்தில் நாங்கள் இடம்பெறுவோம். நாங்கள் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் , அதில் நாங்கள் கூட்டணி அமைச்சரவையிலும் இடம்பெற வாய்ப்புள்ளது. திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலவீனத்தை வைத்தும் கூட்டணியில் தவறு செய்வார்கள் என்ற நம்பிக்கையிலும் தான் அவர்கள் அறைகூவல் விடுக்கின்றனர்.

   

அமலாக்கத்துறை ஊழல் நடைபெற்றுள்ளது என்று அறிக்கை அளித்துள்ளது. தமிழக அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கின்றது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை அமமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதி மற்றும் புதுச்சேரியிலும் போட்டியிட விரும்புவர்களின் விருப்ப மனுக்கள் பெற உள்ளோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.