இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்திய ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் சுசத்யோ பூர்னோமோ காண்ட்ரோ கூறுகையில், தீ தற்போது அணைக்கப்பட்டுவிட்டதாகவும், கட்டிடத்திற்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
