அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள கே.கே.செல்வம், தனது சித்தப்பாவும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவிற்கு துரோகம் செய்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தவறான தகவல்களையும், அவதூறான குற்றச்சாட்டுகளையும் பரப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தங்கள் குடும்பத்தின் ஆதரவு மட்டும் இல்லையென்றால், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செங்கோட்டையன் தோல்வியைச் சந்தித்திருப்பார் என்றும் கே.கே.செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
