பஞ்சாபில் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தந்தையால் கால்வாயில் தள்ளிவிடப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயிரோடு வந்துள்ளார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவரும், நான்கு சகோதரிகளில் மூத்தவருமான இந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் முன் வந்து, தான் தப்பித்தது குறித்தும், தனது தந்தை சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற அதிர்ச்சியூட்டும் வேண்டுகோளையும்பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
சிறுமியின் உறவினரின் புகாரின் பேரில், ஃபெரோஸ்பூர் நகர காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து சிங்கை கைது செய்து மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமி தான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பதை கூறியுள்ளார். . கால்வாயின் சீற்றம் தன்னை இழுத்துச் சென்றதால், தனது மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் தளர்ந்ததால் உதவியற்ற நிலையில் அவள் தலை தண்ணீரிலிருந்து வெளியே நீட்டிய ஒரு இரும்பு கம்பியில் மோதியது, அந்த வலிமிகுந்த அடி அவளுடைய உயிர்நாடியாக மாறியது. அவள் அதைப் பிடித்துக் கொண்டு கரையை அடைந்தாள்.
அப்போது அந்த வழியாகச் சென்ற மூன்று பேர் அவளைக் கண்டு பாதுகாப்பாக இழுத்துச் சென்றனர். இருப்பினும், இரண்டு மாதங்களாக எங்கு அடைக்கலம் கண்டேன் என்பதை அவள் வெளிப்படுத்தவில்லை, ஆனால் தான் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினாள். அவள் இப்போது தனது தந்தையை விடுவிக்க அதிகாரிகளிடம் கெஞ்சியிருக்கிறாள். அதாவது “என் தங்கைகளைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லை,” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
