“தனிக்கட்சி”, இனி என் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக் கூடாது… சற்றுமுன் ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

பாமகவில் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தான் பாமக தலைவர் என்று கூறியது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாமகவின் மாம்பழ சின்னம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லிக்காட்ட வேண்டி உள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய் மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளது. கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. கட்சி எங்களுக்கு இல்லை என சொல்ல எனக்கு ஒரு பிள்ளை. தேவை என்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளட்டும். இனி என்னுடைய பெயரையோ படத்தையோ அன்புமணி எங்கேயும் பயன்படுத்தக்கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்ப கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று ராமதாஸ் ஆதங்கத்துடன் பேசி உள்ளார்.