“எங்க அம்மா செத்துட்டாங்க, வீட்டுக்கு போக ஹெல்ப் பண்ணுங்க”… ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை… இரவில் பல கிலோமீட்டர் தாயின் சடலத்தை ஸ்ட்ரக்ஷனில் வீட்டுக்கு இழுத்துச் சென்ற மகன்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

பீகார் மாநிலம் சசாரம் மாவட்டத்தில் வசிக்கும் சஞ்சய் குமார் என்பவருடைய தாய் உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே சிகிச்சை பலனின்றி அவருடைய தாய் உயிரிழந்த நிலையில் சஞ்சய் தன்னுடைய தாயின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கேட்டுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் தன்னுடைய தாயின் உடலை வைத்து தன் வீட்டுக்கு இரவில் பல கிலோ மீட்டர் இழுத்துக் கொண்டு சஞ்சய் சென்றுள்ளார். இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவையான ஆம்புலன்ஸ் வசதி கூட மறுக்கப்பட்டது குறித்து வெளியாகி உள்ள இந்த வீடியோ தற்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.