பெண்களே..! தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? இதோ முழு விவரம்..!!

By Soundarya on மார்கழி 9, 2025

Spread the love
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடக்கி செய்லபடுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவசமாகத் தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது. பெண்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 40-ஐ தாண்டாமல் இருக்க வேண்டும்.
 
மேலும் இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.tnsocialwelfare.tn.gov.in சென்று அறிந்து கொள்ளலாம்.