துல்கர் சல்மான் நடித்த காந்தா படம் ஓடிடியில் ரிலீஸ் எப்போது? – வெளியான அதிகாரபூர்வ தகவல்!

By Elango on மார்கழி 9, 2025

Spread the love

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா படம் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியானது. இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் எம்கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று படமாகும். இந்த படத்தில் மிஸ்டர் பச்சன் படத்தில் நடித்த பாக்யஸ்ரீ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

காந்தா படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் காந்தா படம் வருகிற 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன.