“நீ எனக்கு அண்ணா உறவு, நான் லவ் பண்ண மாட்டேன்”… காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி… செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி காதலன் செய்த கொடூரம்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை வையாபுரி நகரில் வசித்து வரும் லட்சுமணன் என்பவருடைய மகன் புகழேந்தி (21). இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட நிலையில் அதே பகுதியில் தள்ளு வண்டியில் பல வகைகளை விற்பனை செய்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உறவினர் ஒருவரின் வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு சென்ற போது அங்கு வந்த உறவுக்கார பெண்ணான 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் புகழேந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்து பேசுவது மற்றும் போனில் பேசுவது என பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் புகழேந்தியின் ஊரில் அம்மன் திருவிழா நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ள முடிவெடுத்த சிறுமி அவரது வீட்டில் பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு புகழேந்தி வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்று உள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு சென்ற நிலையில் சிறுமி புகழேந்தியுடன் அவரது வீட்டிலிருந்து உள்ளார். அப்போது திருவிழாவிற்கு வந்த இருவரும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று கூறி சிறுமியை வற்புறுத்தி புகழேந்தி அவருக்கு முத்தம் கொடுப்பது போலவும் நெருக்கமாக இருப்பது போலவும் செல்பி எடுத்துள்ளார்.

   

பிறகு சிறுமி பள்ளிக்கு செல்லாமல் புகழேந்தி வீட்டுக்கு சென்றது மாணவியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுமி மற்றும் புகழேந்தி காதலிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், புகழேந்தி உனக்கு அண்ணா உறவு, அதனால் இனிமே நீங்க காதலிப்பதை நிறுத்திக்கோங்க, ஏதோ சின்ன பசங்க தெரியாம பண்ணிட்டீங்க என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மாணவி புகழேந்தியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. இருந்தாலும் தொடர்ந்து மனைவியிடம் புகழேந்தி பேச முயற்சித்துள்ளார்.

   

அதற்கு மாணவி மறுத்து வந்த நிலையில் சிறுமி பள்ளிக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்று, நீ என்னை காதலிக்கவில்லை என்றால் இருவரும் பழகிய போது எடுத்த புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு மாணவி எந்த பதிலும் அளிக்காமல் சென்ற நிலையில் மாணவியுடன் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழேந்தி பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் சிறுமியின் பெற்றோரிடம் கூறிய நிலையில் உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புகழேந்தியை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.