மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற சமூக மற்றும் தொழிலாளர் ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ், 95, தனது நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் நேற்று (டிசம்பர் 8) காலமானார். அவர் ஆட்டோ ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புசாராத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் போராடியவர். இந்நிலையில் அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
