திடீர் திருப்பம்… 2026 தேர்தல் கூட்டணி முடிவு… அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாஜக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்றத் தேர்தலை டார்கெட் செய்துள்ளது. ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளதால் விஜயை தனது கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் வலிமையான கூட்டணியோடு 2026 தேர்தலை சந்திப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் அமித்ஷாவை சந்தித்து பேசி அண்ணாமலை மீண்டும் நேற்று டெல்லி சென்றுள்ளார். முன்னதாக கோவை ஏர்போட்டில் பேட்டியளித்து அவர், திமுக கூட்டணியில் எழுத காங்கிரஸ் வெளியேறும் என தனக்கு தோன்றவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.