BREAKING: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை… வந்தது மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு ரயில்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அத்பன்படி மும்பை – திருவனந்தபுரம் சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது, மும்பையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு டிசம்பர் 18 முதல் ஜனவரி 8 வரை (ஒவ்வொரு வியாழக்கிழமையும்) இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் (திருவனந்தபுரம் – மும்பை), டிசம்பர் 20 முதல் ஜனவரி 10 வரை (ஒவ்வொரு சனிக்கிழமையும்) இயக்கப்படும். மைசூரிலிருந்து தூத்துக்குடிக்கு டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் (தூத்துக்குடி – மைசூரு), டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.