“மொழிப் பற்று” என்பது “மொழித் திணிப்பாக” மாறுகிறதா.? இந்தி பேசியதால் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர்… இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love
புனேவில் இருந்து பதிவான ஒரு காணொளி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு  குஜராத்தி இளைஞர் மராத்தி மொழிக்குப் பதிலாக இந்தி பேசிய ஒரே காரணத்திற்காக மிரட்டப்பட்டு, மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவர் தனது மொழியைத் திணிக்கவோ அல்லது உள்ளூர் மக்களை அவமதிக்கவோ இல்லை. இருப்பினும்  அவரை எதிர்கொண்ட ஒரு கும்பல், அவர் மராத்தியிலேயே பேச வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் “மொழிப் பற்று” என்பது “மொழித் திணிப்பாக” (Language Policing) மாறி வருகிறதா? என்ற விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. ஒரு தேசிய மொழியைப் பேசும் ஒருவர் ஏன் பொதுமக்கள் முன்னிலையில் இவ்வாறு அவமானப்படுத்தப்பட வேண்டும் என்ற கேள்வியையும் இது முன்வைக்கிறது.