தமிழ்நாட்டில் வருமானச் சான்றிதழ் பெரும்பாலும் TNeGA (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) இணையதளம் மூலமாக அல்லது அரசு இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் (BPL) அல்லது குறிப்பிட்ட வருமான வரம்புக்குட்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதற்கு இது பயன்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இது அவசியமான ஆவணமாகும். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு வருமானச் சான்று கட்டாயம் தேவை.
முன்பு இதற்காக அலைய வேண்டியது இருக்கும். ஆனால் அதை தற்போது Trega என்ற அரசின் இணையதள பக்கத்தில் ஈசியாக வாங்கலாம். அந்த இணையதள பக்கத்தில் Login செய்து, “வருமானம் சான்றிதழ் விண்ணப்பம் பிரிவுக்கு” செல்லவும். அங்கு கேட்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால், நான்கு நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
