“ஏய்.. ஏய்.. என்னடா பண்ற”…. போலீஸ் கையை ஆக்ரோஷமாக கடித்து குதறிய தவெக தொண்டர்… பரபரப்பை கிளப்பும் வீடியோ…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூட்டத்தை அகற்ற கோரி தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில் அதையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசுக்கும் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முயற்சி செய்தபோது அங்கே இருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர் ஒருவர் தடுத்து நிறுத்திய காவலரின் கையைப் பிடித்து கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் என்பது மிக அவசியம் என பல கட்சி அரசியல் தலைவர்களும் கூறிவரும் நிலையில் இந்த சம்பவம் மீண்டும் அவர்களின் ஒழுக்க கட்டுப்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Thanthi TV பதிவைப் பகிர்ந்துள்ளார் (@thanthitv)