நவகிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே தான் இருப்பார். அதன்படி தற்போது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்குள் கேது நுழைய உள்ளார். அவ்வகையில் கடக ராசியில் கேது நுழைவதால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.
மகரம்:
இந்த ராசிக்காரர்களுக்கு நிதிநிலை உயரும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் வந்து விடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். அற்புதமான திருமண வாழ்க்கை அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நல்ல நிதி ஆதாயம் உண்டாகும்.
துலாம்:
இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொந்தமாக தொழிலில் பலன்களை பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வாழ்வில் நல்ல வெற்றியை பெறுவார்கள். பணியாற்றும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை உடனான உறவு சிறப்பாக அமையும்.
கன்னி:
இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாயங்கள் உருவாகும். திடீர் லாபங்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உருவாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்துவிடும். முதலீடுகளில் இருந்து நல்ல பலனை பெறுவீர்கள். பங்குச்சந்தை மற்றும் லாட்டரி நல்ல லாபம் கிடைக்கும்.
