அலறும் அரசியல் களம்.. கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை?… செங்கோட்டையன் சற்றுமுன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக செங்கோட்டையன் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கட்சியை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெருந்துறை சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு மனு அளித்துள்ளோம். மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் கேட்டுள்ளோம். விஜயின் வருகை ஈரோட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல்தான் தெரியவரும் என்று செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.