ஒன்னா ரெண்டா பல பெண்களை சீரழித்த கேரளா டீ மாஸ்டர்… இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளுக்கு காதல் வலை.. உல்லாசமாக இருந்துவிட்டு இறுதியில் செய்த கொடூரம்…!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி குடும்ப வறுமையால் படிப்பை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் கடைக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி திடீரென மாயமான நிலையில் பெற்றோர்கள் சிறுமியை தேடினர். இந்நிலையில் அடுத்த நாள் வீடு திரும்பிய சிறுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலன் பீட்டர் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பைக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

மேலும் தான் அணிந்திருந்த தங்க கம்மல் மோதிரத்தை வாங்கிக் கொண்டு பைக்கில் ஏற்றி அம்மாண்டிவிளை பகுதியில் இறக்கி தவிக்கவிட்டு தப்பி சென்று விட்டதாகவும் தன்னை காதலன் ஏமாற்றி விட்டதால் வீடு திரும்பியதாகவும் அந்த சிறுமி கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிசிடிவி கேமரா இல்லாத அந்த விடுதியில் போலியான ஆதார் நம்பர் கொடுத்து இன்ஸ்டாகிராம் காதலன் அரையடுத்து சிறுமியுடன் தங்கியது தெரியவந்தது.

   

இன்ஸ்டாகிராம் ஐடியும் லாக் அவுட் செய்யப்பட்டதால் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சிறுமியிடம் அவன் தொடர்பு கொண்டசெல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே செல்போனின் IME நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது அந்த செல்போன் வேறு புதிய என்னுடன் தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வீட்டில் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது.

   

இதனை அறிந்த போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த தில்லாலங்கடி போல் இன்ஸ்டாகிராம் காதலன் கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த 24 வயதான பினு என்பதும் டீ மாஸ்டர் ஆன இவர் திருவிழா கடைகளுக்கு சென்று குலுக்கி சர்பத் வியாபாரம் செய்து வந்ததும் பெரிய வந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் காதலித்த ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து வந்து தன்னிடம் ஒரு நாள் தங்க அடைக்கலம் கேட்டதாகவும் இரவு தங்கியவர் காலையில் சொந்த ஊரான கேரளாவிற்கு செல்வதாக கூறி சிறுமியுடன் சென்றுவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே ஒரு சிறுமியை ஏமாற்றி எஸ்கேப் ஆனவர் மற்றொரு சிறுமியையும் ஏமாற்றி அழைத்து வந்துள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கேரளாவிற்கு சென்று அவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் ஏராளமான பெண்களிடம் இதுபோன்று காதல் வலை வீசி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.