கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் மழை அதிகமாக இருந்தது. தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டியது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும் டிசம்பர் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிசம்பர் 10ம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
