உஷார்..! இரவு 17 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை மையம் அலெர்ட் அறிவிப்பு…!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை போன்ற ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று  இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.