Ilayaraja

நீ என்ன எனக்கா பொறந்தே? பிரபல நடிகரை பார்த்து கோபமாக கேட்ட இசைஞானி!

By Elango on மார்கழி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி அஞ்சாதே சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் சமீபகாலமாக படங்களிலும் நடித்து வருகிறார். சவரக்கத்தி மாவீரன் லியோ வணங்கான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இசைஞானி இளையராஜா மீது அளவுக்கு அதிகமாக அன்பும் மரியாதையும் கொண்டவர். இதை அவரே பலமுறை நேர்காணல்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, இளையராஜாவை நான் எப்போதும் அப்பா என்று தான் கூப்பிடுவேன்.

ஒரு நாள் ஒரு பாடல் பதிவின்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. நான் தொடர்ந்து அப்பா அப்பா அப்பா என்று கூறிக் கொண்டே அவரிடம் சண்டை போட்டேன். கொஞ்ச நேரம் கழித்து அவர் கோபமாக, என்னை அப்பா என்று கூப்பிடாதே, நீ என்ன எனக்கா பொறந்தே? என்று திடீர் என்று கேட்டுட்டார். அதைக் கேட்டு நான் அப்படியே உடைந்து போய்விட்டேன். அங்கேயே ஒரு மணி நேரம் நின்று அழுது கொண்டிருந்தேன். நான் மிகவும் மனம் வருந்தி உடைந்து அழுதது அன்றைக்குதான் என்று மிஷ்கின் கூறியிருக்கிறார்