‘Skill India Digital’ இந்திய தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம் என்பது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சாரமாகும் . இது இந்திய தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பல்வேறு திறன்களில் பயிற்சி அளிக்கும் வகையில், ஜூலை 15, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறன் இந்தியா பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் Finance, Marketing, Coding, AI போன்ற பாடங்களை இலவசமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கற்கலாம். இந்த ஆன்லைன் பயிற்சிகளை முடிக்கும்பட்சத்தில், பயிற்சிச் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலையும் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
