சாட்டையை சுழற்றிய விஜய்.. “தவெகவில் சில கருப்பு ஆடுகள்”… செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் அசைன்மென்ட்..!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் மிக பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இப்படியான நிலையில் விஜய் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார்.

இந்நிலையில் தவெகவின் மா.செ.க்கள், நிர்வாகிகள் சிலர் திமுக, அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய், கட்சியின் பேஸ்மெண்ட்டில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என முடிவெடுத்து அதற்கான ஸ்பெஷல் அசைன்மென்டை செங்கோட்டையனிடம்  கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் செங்கோட்டையன் மா.செ.க்களுடன் மீட்டிங் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.