தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டியின் நிலவி வருகிறது. இதனால் யார் வெற்றிவாகை சூடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இப்படியான நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு மத்திய உளவுத்துறை எடுத்த சர்வேயில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு 70 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணி 90, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 35, நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் முன்னிலை வகிப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 38 தொகுதிகளிலும் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக வட மற்றும் தென் மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சர்வே கூறுகிறது.
