“ஐயோ யாராவது உதவி பண்ணுங்களே, என் பொண்ணுக்கு ரத்தமா போகுது”… விமான நிலையத்தில் கதறிய தந்தை… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

இண்டிகோவின் தொடர்ச்சியான விமானங்கள் ரத்து இந்தியா முழுவதும் பல விமான நிலையங்களில் பரவலான விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் எதிர்பாராத தாமதங்களை சமாளிக்க முடியாமல் திணறினர். இந்த குழப்பத்திற்கு மத்தியில் ஆண் பயணி ஒருவர் வருத்தம் அடைந்த விமான நிறுவனத்தின் உதவி மையத்தில் உதவி கோரி கதறுகின்றார். சமூக ஊடகத்தில் பரவி வரும் இந்த சம்பவத்தின் வீடியோவில், உதவி மையத்தில் ஊழியர்கள் கோரிய பொருளை வழங்க முடியாத போது அந்த நபர் அங்கு சலசலப்பை ஏற்படுத்துகிறார். இது டெல்லி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

விமான நிலைய செக் இன் கவுண்டரில் தந்தை ஒருவர் தன்னுடைய மகளுக்கு உதவி கோரும் போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பையனை தன்னுடைய மகளுக்கு மாதவிடாய் வந்துவிட்டதாகவும் அதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டு வருவதால் அவசரமாக சானிட்டரி பேட் தேவை என்றும் கத்துவதை கேட்க முடிகிறது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட முயன்ற போது பயணி விரத்தியில் கவுண்டரை தாக்கினார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.