விஜய் கட்சியில் இணைந்ததற்கான முக்கிய காரணம்…. நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அண்மை காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்திருப்பது கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்துள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், அறிவாலயத்திலிருந்து என்னை வசை பாடினார்கள். என்னை வசைபாடியதால் நான் மனதளவில் உடைந்து போனேன். திமுகவின் அறிவு திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் நான் இணையவில்லை. பெரியார் மற்றும் அந்நாள் லட்சியங்களை பேசி வந்த நான் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளேன்.

   

புதிதாக பிறந்ததைப் போல எண்ணி பூரிக்கிறேன். தமிழகத்தில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளது. பரப்புரை செய்வதற்கு விஜய் எனக்கு அனுமதி வழங்கியுள்ளார். என்னை இதுநாள் வரை முடக்கி வைத்திருந்தனர். இயக்குவதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியுள்ளார். இளைஞர்களை வைத்து அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜய் இடம் உள்ளது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.