2026 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். தங்களுடைய கட்சியை பலப்படுத்த பல வியூகங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அதிமுக, திமுக, நாதக, தவெக என இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுவதால் நொடிக்கு நொடி அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.
இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் கட்டமாக 100 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்க கூடிய 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களான இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யம் தொகுதியிலும், வீரப்பன் மகளான வித்யா ராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இயக்குனர் களஞ்சியம் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காண்கின்றார். சீமான் போட்டியிடும் தொகுதி பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
