போடு ரகிட ரகிட… இன்னும் 15 நாட்களில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப்… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிசம்பர் மூன்றாவது வாரம் தொடங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசியல் நடப்பாண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய மூன்று நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிசம்பர் மூன்றாவது வாரம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என்று மூன்று மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.