ஜோதிடத்தின் படி வருகின்ற 2026 ஆம் ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்களை தரப் போகின்றது. ஏனென்றால் கிரகங்கள் தன்னுடைய ராசியை மாற்றும்போது அதன் பலன் அனைத்து ராசிகளில் பிறந்தவர்களுக்கும் இருக்கும். எவ்வளவு கஷ்டங்களை பார்த்தாலும் சிலருடைய வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலமே வராமல் இருக்கும். இதுபோன்ற பிரச்சினையில் இருப்பவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சிறப்பான பலனை தரும்.
கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் அடுத்த வருடம் 3 முறை தன்னுடைய நிலையில் இருந்து பெயர்ச்சி அடைவார். புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு மற்றும் வியாபாரம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரராக பார்க்கப்படும் புதன் பயிற்சி அடையும்போது அதன் தாக்கம் 12 ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இருக்கும். அதன்படி சில விஷயங்களில் கொடி கட்டி பறக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்:
மிதுன ராசியின் அதிபதியாக இருக்கும் புதன் கிரகம் 2026 ஆம் ஆண்டில் மூன்று முறை வக்கிர நிலையில் பயணிக்க போகின்றார். இந்த மாற்றத்தின் தாக்கம் வியாபாரங்கள் செய்பவர்களுக்கு அமோக வரவை தரப் போகிறது. வருமானம் அதிகரிப்பு காரணமாக ஆடம்பர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ரிஷபம்:
2026 ஆம் ஆண்டில் மூன்று முறை வக்ர நிலையில் பயணிக்கும் புதன் பகவான் ரிஷப ராசியினர் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை கொண்டு வரப் போகின்றார். இவ்வளவு நாட்களாக வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று தைரியமாக உழைக்க தொடங்கலாம். நல்ல லாபமும் இவர்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நிறைய பலன்கள் கிடைக்கும்.
கும்பம்:
புதன் 2026 ஆம் ஆண்டில் மூன்று முறை வக்கிர நிலையில் பயணிக்கும் போது புதிய வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கவில்லை என கவலையாக இருப்பவர்களுக்கு இந்த காலம் மகிழ்ச்சியாக மாறும்.
