BREAKING: செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்… செம ஷாக்கில் ஸ்டாலின், இபிஎஸ்….!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகம் அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM இல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இனி பொது கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை இணைந்த பிறகு அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகளை விஜய் கட்சியில் இணைப்பதில் தீவிரம் காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.