அராரியாவில் உள்ள ஒரு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் 28 வயது பெண் ஆசிரியை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,. உத்தரபிரதேசத்தில் உள்ள பராபங்கியைச் சேர்ந்த இறந்தவர் ஆசிரியை ஷிவானிகுமாரி. இவர் 2023 ஆம் ஆண்டு பீகார் பொது சேவை ஆணையத்தால் (BPSC) TRE-1 மூலம் பணியமர்த்தப்பட்டு, நர்பத்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட கன்ஹைலி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.” கொலைக்கான காரணத்தை புலனாய்வாளர்கள் கண்டறிய முயற்சித்து வருவதாகவும், பள்ளி ஊழியர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ்கஞ்சில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார், மேலும் பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்று வந்தார். இவரின் நிச்சயதார்த்தம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததாகவும், உத்தரபிரதேசத்தில் சில நாட்களில் அவரது திருமணம் திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார், ஆனால் அவர் அவரது விருப்பத்தை பலமுறை நிராகரித்தார். இதுதான் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
